"பெருந்தலைவர் ஆட்சியை பார்க்காத, படிக்காதவர் அதை மற்றவைகளுடன் ஒப்பிட்டுவது தவறு. ராஜீவ் காந்தியின் கனவு காமராஜர் ஆட்சி, அது உண்மையான காங்கிரஸ்காரர்களின் கனவு.. ஒரு நாள் அது நடக்கும்" என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியிருந்தார். இந்நிலையில், “எங்கெல்லாம் நல்லாட்சி நடக்கிறதோ, அவை எல்லாம் காமராஜர் ஆட்சிதான். புரிதல் இல்லாமல் அவர் கூறியுள்ளார்" தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளதால் தமிழ்நாடு காங்கிரஸில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.