தியாகராய நகர் - Thiyagarayanagar

தமிழக மீனவர்கள் அவமதிப்பு: மார்க்சிஸ்ட், பாமக கண்டனம்

தமிழக மீனவர்கள் அவமதிப்பு: மார்க்சிஸ்ட், பாமக கண்டனம்

இலங்கையில் தமிழக மீனவர்கள் அவமதிக்கப்பட்டதை மத்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பாமக கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்: தமிழக மீனவர்களை கைது செய்தும், உடைமைகளை முடக்கியும் அச்சுறுத்தி வந்த இலங்கை அரசின் அட்டூழியம் தற்போது மீனவர்களை மொட்டையடித்து அவமதிக்கும் அநாகரீக எல்லைக்குச் சென்றுள்ளது. இலங்கை கடற்படையின் இந்த அராஜகப்போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதையொட்டி இலங்கை அரசையும், தமிழக மீனவர்களின் பிரச்சினையில் பாராமுகமாக உள்ள மத்திய பாஜக அரசாங்கத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் வரும் செப். 20-ம் தேதி ராமேசுவரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும். பாமக நிறுவனர் ராமதாஸ்: இலங்கை சிறைச்சாலையில் நிகழ்த்தப்பட்ட அவமதிப்பு தமிழக மீனவர்களுக்கு மட்டும் நிகழ்த்தப்பட்ட அவமதிப்பு அல்ல. இந்திய இறையாண்மைக்கு நிகழ்த்தப்பட்ட அவமதிப்பு. இதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்களை அவமதித்த இலங்கை அரசை இந்தியா கடுமையாக கண்டிப்பதுடன், பன்னாட்டு சட்டப்படி நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வீடியோஸ்


சென்னை