திமுகவில் துரைமுருகனுக்கு உரிய அங்கீகாரம் இல்லை - தமிழிசை

58பார்த்தது
மேடையில் துரைமுருகன் குறித்து பேசி,  ரஜினிகாந்த் திமுகவில் புயலை உருவாக்கிவிட்டார் என்று தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக, அதிமுக குறித்து மாநில தலைவர் அண்ணாமலைக்கு கருத்து சொல்வதற்கு உரிமை இருக்கிறது. முடிவு எடுப்பதற்கும் உரிமை இருக்கிறது. தற்போது அண்ணாமலையின் கருத்துக்கு என்னால் மறுப்புப் பேச முடியாது. என்னைப் பொறுத்தவரை திமுக ஆட்சியில் இருந்து இறக்கப்பட வேண்டும். அதுதான் எங்களது ஒற்றைக் குறிக்கோள். வரும் செப். 25-ம் தேதி வரை எங்களது முழு கவனமும் உறுப்பினர் சேர்க்கையில் தான் இருக்கப்போகிறது.

மேடையில் துரைமுருகன் குறித்து பேசி, ரஜினிகாந்த் திமுகவில் புயலை உருவாக்கியிருக்கிறார். நான் சிறுவயதில் துரைமுருகன் வீட்டின் முன்பு மணலில் விளையாடி இருக்கிறேன். அவர் வீட்டின் முன்பு விளையாடிய நான், ஒரு கட்சியின் தலைவராகி, 2 மாநில ஆளுநராகி, தற்போது ஒரு கட்சியை பலப்படுத்தும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். மூத்த அரசியல்வாதியான துரைமுருகன் மாணவராக இருந்திருக்க முடியாது. கண்டிப்பாக ஆசிரியராக தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால்தான் வாரிசு அரசியலை வேண்டாம் என்கிறோம். கட்சிக்காக உழைக்கும் திமுக தொண்டர்கள் இதை சிந்திக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

நன்றி ஏஎன்ஐ

தொடர்புடைய செய்தி