மீனவர் பிரச்சனை: அண்ணாமலை தலைமையில் மத்திய அமைச்சரிடம் மனு

83பார்த்தது
இந்தியா, இலங்கை பிரதிநிதிகள் சந்திப்பை ஏற்படுத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் அண்ணாமலை தலைமையிலான மீனவர்கள் கோரிக்கை மனு வழங்கினர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழக மீனவர் பிரதிநிதிகள் நேற்று டெல்லி சென்றனர். டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பான மனுவை வழங்கினர். அப்போது, சர்வதேச ஆழ்கடல் பகுதியில் இலங்கை கடற்படை படகு மோதி உயிரிழந்த மீனவர் மற்றும் காணாமல் போன மற்றொரு மீனவர் குறித்தும், ராமநாதபுரத்தில் மீனவர்கள் போராட்டம் குறித்தும் பேசப்பட்டது. காணாமல் போன மீனவரை விரைந்து கண்டுப்பிடிக்க நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது என்றும் அப்போது மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்கள் அனைவரையும் விரைவாக மீட்டு தர வேண்டும். இந்திய, இலங்கை பிரதிநிதிகள் சந்திப்பை இந்திய அரசு ஏற்படுத்தி தர வேண்டும். பணியில் இருக்கும்போது மரணம் ஏற்பட்டால் மீனவர்களுக்கு இழப்பீடு கிடைக்கும் வகையில், விபத்துக்கள் அல்லாத ஆயுள் பாதுகாப்பு திட்டம் வேண்டும். மீனவர்களுக்கு டீசலுக்காக வழங்கப்படும் மானியம் அதிகரிக்கப்பட வேண்டும்.

தொடர்புடைய செய்தி