மதவாத சக்திகளுடன் முதல்வர் ஸ்டாலின் சமரசம் செய்து கொள்ளமாட்டார் என்று தமிழ்நாடு காங்கிஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் மதவாத சக்திகளுடன் எப்போதும் சமரசம் செய்துகொள்ள மாட்டார் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன். காமராஜருக்குப் பின்னர் தமிழகத்தில் பல திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தியவர் கருணாநிதி. தமிழக மக்களுக்காக உண்மையாக உழைத்தவர். அவரை யார் வாழ்த்தினாலும் மகிழ்ச்சியடைவோம் என தெரிவித்தார்.