உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலமுடன் தங்களது ஊருக்குத் திரும்ப அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் சமூக வலைத்தளப்பதிவில், உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
அங்கு பாதுகாப்பாக உள்ள தமிழர்களில் ஒருவரான பராசக்தி அவர்களைத் தொடர்புகொண்டு பேசினேன். பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலமுடன் தங்களது ஊருக்குத் திரும்ப அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.