தியாகராய நகர் - Thiyagarayanagar

நெஞ்சமெல்லாம் துடிக்கிறது - ‘வாழை’ படத்துக்கு ரஜினி பாராட்டு

நெஞ்சமெல்லாம் துடிக்கிறது - ‘வாழை’ படத்துக்கு ரஜினி பாராட்டு

‘வாழை’ திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரஜினிகாந்த் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “மாரி செல்வராஜ் உடைய ‘வாழை’ படம் பார்த்தேன். ஒரு அற்புதமான, தரமான படம் தமிழில் ரொம்ப நாளைக்கு பிறகு வந்திருக்கிறது. மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்துக்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார். அதில் அந்த பையன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்டங்கள் அதை நாமே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. கிளைமாக்ஸில் அந்த பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையனுக்கு ஒரு கைசோறு சாப்பிடவிடவில்லையே என்று கதறும்போது, நமது நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது. மாரி செல்வராஜ் தான் ஒரு தலைசிறந்த இயக்குனர் என்பதை இந்த படத்தின் முலம் நிரூபித்திருக்கிறார். மாரி செல்வராஜுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும் என ரஜினி தெரிவித்துள்ளார். ரஜினியின் வாழ்த்துச் செய்திக்கு நன்றி தெரிவித்து பதிலளித்துள்ள மாரி செல்வராஜ், அன்று பழைய தகரப்பெட்டிக்குள் உங்கள் புகைப்படங்களை தேடி தேடி சேகரித்து வைத்த அந்த சிறுவனின் கனவுக்குள்ளிருந்து அவனின் பிஞ்சு விரல்களை கொண்டே எழுதி சொல்கிறேன். உங்கள் வாழ்த்துக்கும் அரவணைப்புக்கும் நன்றிகள் எங்கள் சூப்பர் ஸடார் அவர்களே! என்று தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


சென்னை
செப். 10வரை வாயிற்கூட்டம்: போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு
Sep 03, 2024, 10:09 IST/துறைமுகம்
துறைமுகம்

செப். 10வரை வாயிற்கூட்டம்: போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு

Sep 03, 2024, 10:09 IST
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி செப்டம்பர் 10 வரை வாயிற்கூட்டங்கள் நடத்தப்படும் என போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியது, கடந்த 27-ம் தேதி, சென்னை குரோம்பேட்டையில் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் 84 சங்கங்கள் கலந்து கொண்டன. பேச்சுவார்த்தை தொடங்கியவுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் சங்கங்களை முறைப்படுத்த வேண்டும் என கூட்டமைப்பின் சார்பில் வைத்துள்ள கோரிக்கையை விவாதிக்க வேண்டுமென கோரினோம். மேலும், அடுத்து நடைபெறும் பேச்சுவார்த்தையில் பணி ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வுக் கால பலன்களை உடனடியாக வழங்குவது, நிலுவை ஓய்வு கால பலன்களை வழங்குவது, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 109 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை வழங்குவது, மருத்துவ காப்பீடு, அனைவருக்கும் ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை கோரிக்கைகளாக முன்வைத்துள்ளோம். இந்தக் கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசு முன் வர வேண்டும் என வலியுறுத்தி அனைத்து மண்டல தலைமையகங்களிலும், செப்டம்பர் 10-ம் தேதி வரை பேச்சுவார்த்தை விளக்க வாயிற்கூட்டங்களை நடத்த இருக்கிறோம் என்று கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறினர்.