முதல்வருடன் திருமாவளவன் சந்திப்பு: மாநாடு தொடர்பாக மனு

66பார்த்தது
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்தார்.

இதற்காக அவர் விசிக நிர்வாகிகளுடன் இன்று காலை 11. 30 மணியளவில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். அங்கே அவர் கட்சி நிர்வாகிகளுடன் முதல்வரை சந்தித்தார். அப்போது, முதல்வர் ஸ்டாலினிடம் கள்ளக்குறிச்சியில் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள 'மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு' தொடர்பாக கோரிக்கை மனுவை கொடுத்துள்ளார்.
முன்னதாக, இந்த மாநாட்டில் அதிமுக கூட பங்கேற்கலாம் என திருமாவளவன் அழைப்பு விடுத்தது அரசியல் களத்தில் சர்ச்சையானது. தொடர்ந்து அண்மையில், செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், திருமாவளவன் பேசிய வீடியோ, அவரது எக்ஸ் வலைதளத்தில் பகிரப்பட்டதும் விவாதப் பொருளானது.

இவ்விவகாரத்தில் பாஜக, பாமக, தேமுதிக, அமமுக போன்ற கட்சிகள் திருமாவளவனை ஆதரித்தன. ஆனால் அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ, “தமிழகத்தில் திராவிட ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை” எனக் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் - விசிக தலைவர் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. இந்தச் சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி