கார் பந்தயம் நடத்தி அநாவசிய செலவு செய்வதா? என தமிழக அரசுக்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமலும், ஓய்வூதியத்தை முறைப்படுத்தாமலும் உள்ளது.
இதுகுறித்து பல முறை தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தும், கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயர் நீதிமன்றமே, அக விலைப்படி உயர்வு வழங்கக் கூறிதீர்ப்பளித்த பின்னரும், திமுக அரசு இதுவரை ஓய்வு பெற்றோருக்கான அகவிலைப்படி உயர்வை வழங்காமல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
திமுக அரசு உண்மையில் எதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறது? அரசுத் துறை களில் பல ஆண்டுகள் சேவை செய்து ஓய்வு பெற்றவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நிதி ஒதுக்காமல், கார் பந்தயம் போன்ற அநாவசிய செலவுகளுக்குப் பெருமளவில் நிதி ஒதுக்கிக் கொண்டிருக்கிறது. பொதுமக்களின் வரிப்பணம், பொதுமக்களுக் கான சேவைகளுக்கே தவிர, திமுகவினர் கேளிக்கைகளுக்கு அல்ல.