தற்போது தமிழகம் பின்னோக்கி செல்கிறது: அண்ணாமலை

68பார்த்தது
தமிழகத்தில் திராவிட கட்சிகளை அகற்ற பாஜகவால் மட்டுமே முடியும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உறுதிபட தெரிவித்தார்.

தமிழக பாஜக சார்பில் சென்னையில் ‘தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில துணை தலைவர் கரு. நாகராஜன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றினார். முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில துணை தலைவர்கள் வி. பி. துரைசாமி, நாராயணன் திருப்பதி, மாநில செயலாளர்கள் சுமதி வெங்கடேசன், கராத்தே தியாகராஜன், பிரமிளா சம்பத், முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி, பாஜக நிர்வாகி நடிகை குஷ்பு, நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் புவனேஸ்வரி, விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, மாநில செய்தி தொடர்பாளர் ஏ. என். எஸ். பிரசாத் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.

இக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, திராவிடக் கட்சிகள் 70 ஆண்டுகளாக தமிழகத்தை சின்னாபின்னமாக்கி உள்ளன. காமராஜர், எம்ஜிஆர் இருவரும் நேர்மையான ஆட்சியை கொடுத்தனர். தற்போது தமிழகம் பின்னோக்கி செல்கிறது.

அமைச்சர்கள் துரைமுருகன், எ. வ. வேலு போன்றோர் இருக்கும்போது, அரியணை உதயநிதிக்கு சென்றால் கலவரம் வெடிக்கும் என்பதை ரஜினிகாந்த் தனது பேச்சில் சுட்டிக்காட்டி இருக்கிறார். திமுகவினர் பழநியில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி