

வீட்டிற்குள் நுழைந்த ஆசாமிகள்.. இளம்பெண்ணுக்கு கத்தி குத்து
ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயநகரம் மாவட்டம் சிவராம் கிராமத்தில், இளம்பெண் ஒருவரை வீட்டிற்குள் நுழைந்து கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த இளம்பெண்ணை, இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். காயமடைந்த இளம்பெண்ணை மீட்டு குடும்பத்தினர், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.