“சைதை துரைசாமி வேலை வெட்டி இல்லாதவர். அவருக்கு பல்வேறு கட்சிகளோடு உள்ள தொடர்புகளை வைத்துக்கொண்டு அதிமுகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை”. அதிமுக ஒன்றிணைய வேண்டும், பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் எனப் பேசிய சைதை துரைசாமி மீது அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.