

தவெகவில் இணையும் காளியம்மாள்.. உறுதிப்படுத்திய சீமான்
தவெகவில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் இணைய உள்ளதை நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதிப்படுத்தியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் சீமானிடம், காளியம்மாள் நாளை தவெகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது என நிரூபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், “எனக்கு அது முன்கூட்டியே தெரியும். தங்கச்சிய வாழ்த்திட்டோம்.. தங்கச்சி எங்கே இருந்தாலும் நல்லா இருக்கட்டும்” என்று பதிலளித்தார். நன்றி: News18 Tamil Nadu