ஹரியானாவில், உபர் ஓட்டுநருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது, பயணியாக வந்த ஒரு பெண் பயணி, காரை ஓட்டி அவர்களுக்கு உதவி செய்துள்ளார். இந்த நிகழ்வின் வீடியோ இணையத்தில் வைரலாகி, பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. நெரிசலான சாலையில் காரை பாதுகாப்பாக ஓட்டிச் சென்ற பெண்ணின் தன்னலமற்ற செயல் மக்கள் மத்தியில் அதிக பாராட்டைப் பெற்றுள்ளது. இந்த இடத்தில் மற்ற பயணிகள் இருந்தால் இவ்வாறு செய்திருப்பார்களா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.