உடுமலையில் புழுக்களுடன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

72பார்த்தது
திருப்பூர் உடுமலை அருகே கண்ணமநாயக்கனூர் மலையாண்டிபட்டினம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வெண்பட்டு உற்பத்தி அதிக அளவு உள்ளது இந்த நிலையில் ஈரோட்டில் இருந்து அரசு முட்டை வித்தகத்தில் இருந்து உடுமலை பகுதி தனியார் பட்டு இளம்புழு வளர்ப்பு மையங்கள் வாங்கி வந்து விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர் இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே தனியார் பட்டுப்புழு மையங்களில் வாங்கிய பட்டுப்புழுக்கள் பலன் தரக்கூடிய நிலையில் தற்பொழுது அனைத்தும் உயிரிழந்து வருகின்றன இதுகுறித்து தனியார் பட்டுப்புழு மையத்தில் கேட்டால் அரசு வித்தகத்தில் இருந்து தான் வாங்கப்படுகின்றது நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என கையை விரிக்கும் நிலையில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் உரிய நிவாரணம் வழங்க கோரி உடுமலையில் உள்ள மத்திய பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி மையம் முன்பு பட்டுப்புழுக்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் தனியார் பட்டுப்புழு மையத்தில் விவசாயிகள் புழுக்கள் உற்பத்தி செய்து வரும் நிலையில் தற்போது தரமற்ற முட்டைகளால் புழுக்கள் உயிரிழந்து வருகின்றன பட்டு புழு வளர்ப்பு மையங்களில் முறையாக கண்காணிக்க வேண்டிய மத்திய பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி மையம் கண்காணிக்காமல் இருந்த காரணத்தால் தற்பொழுது புழுக்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன என உரிய நிவாரணம் வழங்க வேண்டும்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி