தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் தாயும், 5 வயது மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காரில் சென்ற 6 பேர் படுகாயங்களுடன் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.