நீண்ட காலத்திற்குப் பிறகு கோயம்புத்தூரில் கனமழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பூர், திருநெல்வேலி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பதிவாகியுள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் இன்று (ஏப்., 05) கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.