பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் நபர் ஒருவர் தன்னை பெற்ற தாயை கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தள்ளாடும் வயதில் இருந்த தனது தாயை கண்மூடித்தனமாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை பார்த்த அவரது மகள்கள் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.