வகுப்பறையில் மயங்கி விழுந்து 9ஆம் வகுப்பு மாணவி பலி

52பார்த்தது
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில், மானசா என்ற மாணவி 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் இன்று பள்ளிக்குச் சென்ற நிலையில் அங்கு திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த சக மாணவிகள் ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தனர். ஆசிரியர்கள் சோதனை செய்ததில் மாணவி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், மாணவியின் உடலை மீட்டு, இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி