

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு
மதுரை - சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்., 04ஆம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே இந்து ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் தான் பேசியதாக தவறான செய்தியை உருவாக்கிய நபர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.