மகாராஷ்டிரா: மும்பை மால்வானி பகுதியில் ஒரு ஆட்டோவில் 2 இளம்பெண்கள் போதைப்பொருளை பயன்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் படம்பிடித்தவர் அந்தப் பெண்களிடம், இது உடலுக்குத் தீங்கு. அட்லீஸ்ட் சிகரெட்டாவது புகையுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு, 'இல்லை.. சிகரெட் வேலை செய்யாது' என்று கூறிய அந்த இளம்பெண், 'இது ஒரு பொட்டலம் இருநூறு ரூபாய்க்கு விற்கின்றனர்' என்று கூறிவிட்டு போதைப்பொருளைத் தொடர்ந்து பயன்படுத்தியுள்ளார்.