கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 2019-ல் நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 9 பேரும் கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அரசு தரப்பு சாட்சியங்கள் முடிந்த நிலையில் 9 பேரிடம் விசாரிக்கப்படுகிறது. இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த வழக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.