திருப்பூரில் 40டன் பிரியாணி விற்று சாதனை

64பார்த்தது
ரம்ஜான் நாளில் பிரியாணியின் தேவை அதிகமாக இருக்கும் என்பதால் பிரியாணி கடைகளில் வழக்கத்தை விட அதிக அளவில் பிரியாணி தயார் செய்யப்பட்டன. குறிப்பாக காங்கயம் ரோடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பிரியாணி கடைகளில் நேற்று அதிகாலை முதல் இரவு வரைக்கும் 'சுடச்சுட' பிரியாணி தயார் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு ஆவி பறக்க வழங்கப்பட்டது. இதனால் பெரும்பாலான கடைகளில் பிரியாணி அடுப்புகள் ஓய்வே இல்லாமல் அணையா விளக்காய் எரிந்து கொண்டிருந்தன

பிரியாணி கடைகளில் பிரியாணி வாங்குவதற்கு பொதுமக்கள் அதிக அளவில் வந்ததால் பல கடைகளில் கூட்டம் அலை மோதியது. சில கடைகளில் கடைக்கு வெளியேயும் பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று பிரியாணி வாங்கி சென்றனர். கடைகளில் ஒரு பக்கம் விற்பனை நடந்து கொண்டிருக்க, மறுபக்கம் பிரியாணி தயாரிப்பும் நடந்தவாறு இருந்ததால் பல்வேறு இடங்களிலும் பிரியாணி வாசனை கம, கமத்தது. சில கடைகளில் ரம்ஜானையொட்டி மொத்த மாக வாங்குபவர்களுக்கு சலுகை விலையில் பிரியாணி விற்பனை செய்யப்பட்டது
பிரியாணி விற்பனை குறித்து ''' பிரியாணி கடை உரிமையாளர்கள் கூறும் போது, 'எங்கள் பகுதியை ஒட்டி யுள்ள கடைகளில் வழக்கமாக சுமார் 2 முதல் 3 டன் பிரி யாணி விற்பனை நடைபெறும் ரம்ஜான் பண்டிகையொட்டி கூட்டம் அதிகமாக இருந்ததால் சுமார் 40டன் பிரியாணி விற்பனையானது' என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி