ஸ்ரீவில்லிபுத்தூர் - Srivilliputhur

ஸ்ரீவி: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை.. மகிளா நீதிமன்றம்

இராஜபாளையம் அருகே சிறுமிக்கு திருமண ஆசை கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை-மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சம்மையாபுரம், வெள்ளையப்பன் கோவில் தெருவை சேர்ந்த பிள்ளையார் என்பவரின் மகன் மாரிச்சாமி 21, இவர், சேத்தூர் கட்டபொம்மன் நகரை சேர்ந்த 18 வயது பூர்த்தியடையாத சிறுமியை கடத்திச் சென்று, திருமண ஆசை காட்டி பலமுறை உடலுறவு செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் சேத்தூர் காவல் நிலையத்தில் 13.9.2021 ஆம் தேதி புகார் அளித்து வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மேற்படி மாரிச்சாமியை நேற்று குற்றவாளி என அறிவித்த நீதிபதி பகவதியம்மாள், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேலும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

வீடியோஸ்


விருதுநகர்