ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே
முயல், காடை வேட்டையாடிய இரண்டு பேர் அதிரடி கைது.
ரூ. 10 ஆயிரம் அபராதம்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முயல் மற்றும் காடை வேட்டையாடிய இரண்டு பேரை பிடித்து வளத்துறையினர் தலா ரூ. 10, 000 அபராதம் விதித்தனர்.
ஸ்ரீவில்லி புத்தூர் அருகே உள்ள அழகாபுரி பகுதியில் முயல் வேட்டை நடைபெறுவதாக வன பாதுகாப்படை அதிகாரி
மலர் கண்டனுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் வன பாதுகாப்பு படை ரேஞ்சர் கார்த்திகேயன் தலைமையில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முயல் மற்றும் காடை விலங்குகளை
வேட்டையாடிய இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பேரையூர் பகுதியைச் சேர்ந்த
ஜெகன் மற்றும் தினேஷ் என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வன பாதுகாப்படை ரேஞ்சர் கார்த்திகேயன் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை ரேஞ்சர் செல்லமணியிடம் இரண்டு பேரையும் ஒப்படைத்தார். வனத்துறை ரேஞ்சர் செல்லமணி இரண்டு பேருக்கும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் வேட்டையாட பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் நெத்திலைட் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.