ஸ்ரீவில்லிபுத்துார் சுற்று பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை. சாலையில் வெள்ள பெருக்கால் வாகன ஓட்டிகள் கடும் அவதி.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் காலையிலிருந்து விட்டு, விட்டு பெய்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளன. இந்நிலையில் இன்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தன. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டிருந்த நிலையில் லேசான சாரல் மழையும் பெய்தன. மாலை நேரத்தில் குளிர்ந்த காற்றுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்று வட்டார பகுதியான மல்லி, வன்னியம்பட்டி, மம்சாபுரம் கிருஷ்ணன்கோவில், வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இந்த கனமழையால் சாலையில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு சாலையில் பயணித்தனர். கன மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.