ஸ்ரீவில்லிபுத்துார் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்த முதியவர் கைது. லாட்டரி சீட்டு மற்றும் ரொக்கப்பணம் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே வத்திராயிருப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தம்பிபட்டி பேருந்து நிறுத்தம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக வத்திராயிருப்பு காவல் நிலையத்துக்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் நிலைய சார்பு ஆய்வாளர் விஜய சண்முகநாதன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை செய்தனர். சோதனையில் அதே பகுதியை சேர்ந்த 73 வயதுடைய முதியவர் பிச்சை என்பவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கப்பணம் ரூ 850 ஐ கைப்பற்றிய போலீஸார், அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.