ஸ்ரீவில்லிபுத்துார் அருகே ஜவுளி கடை முன்பாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த முதியவர் கைது. லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே வத்திராயிருப்புயிலுள்ள ஜவுளி கடை முன்பாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக வத்திராயிருப்பு காவல் நிலையத்துக்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை செய்தனர். சோதனையில் தம்பிபட்டி கீழத் தெருவை சேர்ந்த 70 வயதுடைய மாரிமுத்து என்பவர் தமிழக அரசலால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ 6000/- ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசரணை நடத்தி வருகின்றனர்.