சர்ச்சைப் பேச்சு வழக்கில் கைதான நடிகை கஸ்தூரி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமின் மனுவை சென்னை எழும்பூர் நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. சென்னை மாநகர காவல்துறை தரப்பில், கஸ்தூரிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்படாது என கூறப்பட்டுள்ளது. மேலும், கஸ்தூரிக்கு ஆட்டிசம் பாதித்த மகன் இருப்பதால், அதனை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகவுள்ளது.