அரசுப் பள்ளி ஆசிரியை படுகொலை... அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம்

599பார்த்தது
அரசுப் பள்ளி ஆசிரியை படுகொலை... அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம்
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை ரமணி (26) என்பவரை, மதன் (30) என்ற இளைஞர் கத்தியால் குத்திக்கொன்றார். இச்சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி