ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மருத்துவ உதவிக்கு ரூ. 25 ஆயிரம் நிதி வழங்கிய மதிமுக கட்சியினர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஆண்டாள்புரம் பகுதியில் நெசவாளர் குடும்பத்தை சார்ந்த ஜோதிலிங்கம் அவரது மனைவி வெள்ளையம்மாள் (57) இவர் மதுரை தனியார் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக தொடர் சிகிக்சை செய்வதற்கு போதிய வசதி இயலாத காரணத்தால் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வந்தார் இதை தெரிந்து கொண்ட மதிமுக நகர செயலாளர் ஜெயக்குமார் மற்றும்
மாவட்டச்செயலாளர் வேல்முருகன் அவரிடம் தெரிவித்த போது மதிமுக கட்சித் தொண்டர் முத்துச்சாமி என்பவர் அவரது சொந்த பணம் 25 ஆயிரத்தை புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் வெள்ளையம்மாளுக்கு நிதி உதவி செய்தார். மேலும் இந்நிகழ்வின் போது மதிமுக கட்சியை சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டனர்.