இராஜபாளையம் அருகே சிறுமிக்கு திருமண ஆசை கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை-மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட சம்மையாபுரம், வெள்ளையப்பன் கோவில் தெருவை சேர்ந்த பிள்ளையார் என்பவரின் மகன் மாரிச்சாமி 21, இவர், சேத்துார் கட்டபொம்மன் நகரை சேர்ந்த 18 வயது பூர்த்தியடையாத சிறுமியை கடத்தி சென்று, திருமண ஆசை காட்டி பலமுறை உடலுறவு செய்து உள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் சேத்துார் காவல் நிலையத்தில் 13. 9. 2021 ஆம் தேதி புகார் பேரில் வழக்கு பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்துார் மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் மேற்படி மாரிச்சாமியை நேற்று குற்றவாளி என அறிவித்த நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள், மேற்படி குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்து உள்ளார். மேலும் அபராத தொகை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென்று தீரப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.