ஸ்ரீவில்லிபுத்தார் அருகே உள்ள ஆற்றில் குளித்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலி. உடலை கைப்பற்றி போலீஸார் விசாரணை.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியிலுள்ள இராக்காச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுடன் வந்து குளித்து மகிழ்ந்து செல்வார்கள். மேலும் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை மேல் மழை பெய்து நீர் ஓடை மற்றும் ஆறுகள், அருவிகளில் வரத்து அதிகமாக காணப்படுவதால் மாவட்ட நிர்வாகம், வனத்துறை சார்பாக குளிக்க தடை செய்யப்பட்டன. மேலும் தடையை மீறி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் குளிக்க சென்றனர் அப்போது இராக்காச்சி அம்மன் கோவில் மீன் முட்டி பாறையில் ஆவரம்பட்டியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவன் சக்தி மகேஸ்வரன் குளித்துக் கொண்டு இருக்கும் போது மழை மீது மலை பெய்து திடீரென ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டன. இதில் குளித்து கொண்டு இருந்த சக்தி மகேஸ்வரனை இழுத்து சென்றதில் அவர் பலத்த காயம் பட்டு சம்பவ இடத்தில் உயிர் இழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மம்சாபுரம் காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து இறந்த பள்ளி மாணவனின் உடலை கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மம்சாபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.