வட கிழக்கு பருவ மழை எந்த ரூபத்தில் வந்தாலும் அரசு எதிர்கொள்ள தயாராக உள்ளது என ஸ்ரீவில்லிபுத்துாரில் அமைச்சர் K. K. S. S. R. ராமச்சந்திரன் பேட்டி.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் அருகே
வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது பிளவக்கல் பெரியாறு அணைகளை விவசாயி பணிகளுக்கு தண்ணீர் திறப்பு விழாவில் அமைச்சர் K. K. S. S. R இராமசந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு டேட்டி அளித்த அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர் ராமச்சந்திரன், பிளைக்கல், பெரியார் அணை பூங்காவை சீரமைக்க 10 கோடி தமிழக முதல்வர் ஒதுக்கிய நிலையில் விரைவில் பணிகள் துவங்கும் என தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை எந்த ரூபத்தில் வந்தாலும் அரசு எதிர் எதிர் கொள்ள தயாராக இருப்பதாகவும், மழை தான் வரவில்லை எனவும் தெரிவித்தார். பேட்டியின் போது அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.