ஸ்ரீவில்லிபுத்துார் மற்று சுற்று பகுதிகளில் இடி, மின்னல், காற்றுடன் கூடிய மிதமான சாரல் மழை.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்று பகுதிகளில் காலை முதல் மேக மூட்டம் காணப்பட்டு வந்த நிலையில் இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று மற்று இடி, மின்னலுடன் மிதமான சாரல் மழை பெய்தன. மேலும் மல்லி, வத்திராயிருப்பு, தம்பிபட்டி,
கூமபட்டி, w. புதுப்பட்டி, கான்சாபுரம், கிருஷ்ணன் கோவில், இராமகிருஷ்ணாபுரம், மம்சாபுரம், போன்ற சுற்று பகுதியில் இரவு நேரத்தில் விட்டு விட்டு மிதமான தொடர் சாரல் மழை பெய்தன. இந்த தொடர் சாரல் மழையால் கிராம பகுதிகளில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டன. மேலும் இந்த மழையால் அணைகள், சிறு கண்மாயில் நீர்வரத்து உயர்ந்து வருவதால் மக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.