ஸ்ரீவி: கோவில் தேரோட்ட திருவிழா. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..

71பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே முத்தாலம்மன் கோவில் தேரோட்டம் திருவிழா. பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்பு.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாபட்டியில் முத்தாலம்மன் கோவில் ஐயப்பசி மாத திருவிழாவை முன்னிட்டு தேரோட்ட திருவிழாவில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மழைக்காக இப்பகுதி மக்களால் நடத்தப்படும் இத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒரு வார காலம் அம்மனுக்கு விழா எடுத்து வழிபடுவதுடன் இறுதி நாளில் தேரோட்டம் நடத்தி வழிபடுவார்கள். பல்வேறு பாரம்பரிய சிறப்புகள் கொண்ட இத்திருவிழா கடந்த வாரம் கொடி சாட்டுதல் வைபவத்துடன் திருவிழா துவங்கியது. கோவிலில் உள்ள பீடத்திற்கு தினமும் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடந்தது ஆறாம் நாளான நேற்று இரவு அம்மன் கண் திறப்பு வைபவம் நடந்தது. இதில் புதிதாக செய்யப்பட்ட அம்மன் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து கண் திறப்பு செய்யப்பட்டது அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று காலை அம்மன் திருத்தேரில் எழுந்தருளி, அம்மனுக்கு சக்தி ஏற்றும் வைபவம் முடிந்த பின் தேரோட்டம் துவங்கியது. தேர் ரத வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தது. பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும் வழிபட்டனர். பக்தர்கள் எதிர்சேவை செய்து அம்மனை மேளதாளம் முழங்க கோவிலுக்கு எடுத்துச் சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி