நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலையில் சென்ற மனைவியை, கணவர் தலையில் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் - மனைவி பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், ஆண் நண்பருடன் சென்ற மனைவியை வழிமறித்து, ஸ்க்ரூ டிரைவரால் தலையில் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார். தொடர்ந்து, காயமடைந்த மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.