ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாகன சோதனையில் 90 கிலோ குட்கா போதைப் பொருட்கள் பறிமுதல். ஒரு பெண் உட்பட ஐந்து பேர் கைது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அழகாபுரி பகுதியில் காவல் துறையினர் வாகன தணிக்கை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் ஓசூர் சேர்ந்த ராணி, ஜெமில் சக்திமோகன் ஆகிய மூவர் வந்துள்ளனர். அவர்களிடம் விசாரணை செய்த போது முன்னுக்குப், பின் முரணாக கூறியுள்ளனர். சந்தேகம் அடைந்த காவல் துறையினர் காரை சோதனை செய்தனர். காரில் பதுக்கி வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 30 கிலோ இருந்து உள்ளது. பின்னர் மூவரையும் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும், குட்கா போதை பொருட்களையும் பறிமுதல் செய்து மூவரிடமும் தீவிர விசாரணை செய்தனர். இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் சேர்ந்த ஜெகநாதன், குப்புனாபுரத்தை சேர்ந்த திருப்பதி என்பவரிடம் குட்கா போதை பொருட்களை விற்பனை செய்ய வந்ததாக தெரிவித்த நிலையில், காவல் துறையினர் ரகசிய தனிப்படைகள் அமைத்து திருப்பதி, ஜெகநாதன் வீட்டில் சோதனை செய்ததில் இருவரிடமிருந்து 60 கிலோ குட்கா போதை பொருட்கள், இருசக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். பின்னர் மொத்தம் 90 கிலோ குட்கா போதை பொருட்களை விற்பனை செய்ய முயன்ற 5 பேர் மீது கிருஷ்ணன் கோவில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.