ஸ்ரீவில்லிபுத்துார் அருகே பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் நாளை நவ. 18ல் தண்ணீர் திறப்பு.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள வத்திராயிருப்பு பிளவக்கல்
பெரியாறு, கோவிலாறு அணைகளில் இருந்து விவசாய பாசனத்திற்காக நாளை நவ. 18 முதல் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. கடந்த ஒரு மாதமாக வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகு தியில் பெய்து வரும் மழையினால் பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வந்தது.
நேற்று காலை நிலவரப்படி பெரியாறு அணையில் 37 அடி உயரத்திற்கும். கோவிலாறு அணையில் 30 அடி உயரத்திற்கும் தண்ணீர் உள்ளது. தொடர்ந்து இரு அணைகளுக்கும் குறைந்த அளவு தண்ணீர் வரத்து உள்ளது.
இந்நிலையில் வத்திராயிருப்பு தாலுகாவில் விவசாய பாசனத்திற்காக நாளை நவ. 18 முதல் இரண்டு அணைகளிலும் இருந்தும் தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி 150 கன அடி வீதம் 6 நாட்களுக்கும் பெரியாறு
கால்வாய் நேரடி பாசனத்திற்கு சார்பில் வினாடிக்கு 3 கன அடி வீதம் 2025 பிப். 28 வரை தண்ணீர் திறந்து விடவும், தொடர்ந்து தண்ணீர் இருப்பை பொருத்து தொடர் அனைத்து கண்மாய் பாசனத்திற்கும் தண்ணீர் திறந்து விடவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் வத்திராயிருப்பு தாலுகா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.