ஸ்ரீவி: விவசாயத்திற்கு அணை திறப்பு. அமைச்சர் பங்கேற்பு..

81பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிளவக்கல், பெரியாறு அணையிலிருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பு. அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர், மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது பிளவக்கல்  பெரியாறு அணை. இது 47 அடி முழு கொள்ளளவு கொண்ட இந்த அணையானது மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாகவும் கருதப்படுகிறது. இந்த அணையை நம்பி சுற்று வட்டாரத்தில் உள்ள கொடிக்குளம், பெரியகுளம், விராடசமுத்திரம், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கண்மாயிகளுக்கு உட்பட்ட
ஆயிரக்கணக்கான விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது.
இந்த அணையின்  நீர்மட்டம் 22 அடியாக இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து    அணையின் நீர்மட்டம் 37 அடியாக  உள்ளது. இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். வினாடிக்கு 150 கன அடி நீர் வீதம் இன்று 6 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி