சிவகாசி: ஊராட்சியில் முன் எச்சரிக்கை நடவடிக்கை
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்கவும், கண்மாய்கள் உடையாமல் இருக்க தேவையான நடவடிக்கையை எடுக்க ஊராட்சி ஒன்றிய தலைவர் முத்துலட்சுமி அதிகாரிகளை யும், ஊராட்சி மன்ற தலைவர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஆண்டு மழையின் போது பல இடங்களில் கழிவுநீர், மழை நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நின்றது. இதை கருத்தில் கொண்டு தற்போது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர் ஓடைகளை ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் முன்னிலையில் சீரமைக்கப்பட்டது. சுமார் 10 ஆண்டுகளாக தூர்வாரப் படாமல் இருந்த கழிவுநீர் ஓடையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் கூறிய தாவது, செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சியில் கண்மாய்கள் உள்ளது. அது நிரம்பி தண்ணீர் ஊருக்குள் வாராமல் இருக்கவும், குடியிருப்பு பகுதியில் பெய்யும் மழை உடனடியாகவெளியேறவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.