சிவகாசி: பட்டாசு பிரச்சனை தீர்வு காணப்படும். இணை அமைச்சர்..

53பார்த்தது
பட்டாசு சரவெடி தடையை‌ நீக்க சட்டப்படி தீர்வு காண வழிவகை செய்யப்படும் என‌சிவகாசியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பேச்சு.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே மாரனேரியில்‌ உள்ள பட்டாசு ஆலை தொழிலாளர்களுடன் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் கலந்துரையாடினார். முன்னதாக அவரை ஆரத்தி எடுத்து பட்டாசு தொழிலாளர்கள் வரவேற்றனர்.
கலந்துரையாடலின் போது, பெண் பட்டாசு தொழிலாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி, கிராமப்புற ஏழைஎளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து உள்ளார். பட்டாசு ஆலையில் வேலை செய்பவர்களுக்கு ஈ. எஸ். ஐ கார்டு மற்றும் மருத்துவ வசதியுடன் பென்ஷன் வசதியும் பிரதமர் செய்து கொடுத்துள்ளார் என்றார். தீபாவளி சீசன் நேரம் இது உங்களை பார்த்து வாழ்த்துவிட்டு, பிரதமரின் பல திட்டங்களை தங்களிடத்தில் சொல்லவந்தேன். தங்களை சந்தித்தது மகிழ்ச்சி என்றார்.
இந்த கலந்துரையாடலின் போது பட்டாசு தொழிலில் சரவெடிக்கு தடை விதிக்கப்பட்டது குறித்தும் தங்களுக்கு அந்த தொழிலை தவிர வேறு தொழில் தெரியாது என தொழிலாளர்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர், மத்திய அரசு தொழிலாளர்கள் பக்கம் இருந்து இதை சட்டப்படி தீர்வு காண வழிவகை செய்யும் என உறுதியளிந்தார். இந்த கலந்துரையாடல் நிகழ்வின் போது தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி