

சிவகாசி: வழிப்பறியில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் கைது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசு தொழிலாளியை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் கைது.சிவகாசி அருகே மீனம்பட்டியை சேர்ந்தவர் பட்டாசு ஆலை தொழிலாளி சரவணக்குமார் (43). இவர் சம்பவத்தன்று சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகில் சென்று கொண்டிருந்த போது அங்கு நின்று கொண்டிருந்த சிவகாசி மருதுபாண்டியர் மடத்து தெருவை சேர்ந்த 3 சிறுவர்கள், சரவணக்குமாரை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ. 1500ஐ பறித்துக் கொண்டு அருகில் இருந்த கிணற்றில் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சரவணக்குமார் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். இச்சம்பவம் குறித்து சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து 17 வயது சிறுவர்கள் 3 பேரை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.