சிவகாசி - Sivakasi

சிவகாசி: சாதனை படைத்த மாணவன்; பாராட்டிய திமுக நிர்வாகிகள்

சிவகாசி: சாதனை படைத்த மாணவன்; பாராட்டிய திமுக நிர்வாகிகள்

கோவையில் தென்னிந்திய அளவில் நடைபெற்ற நேரு டெக்னாலஜி கல்லூரியில் பெஞ்ச் பிரஸ் மற்றும் கர்காலகட்டை, புஷ் ஷாப் டெட் லிப்ட் போட்டி நடைபெற்றது. இதில் சாம்பியன் ஜிம் விளையாட்டு வீரர்கள் மற்றும் பெண்கள் ஜூனியர், சீனியர் பல்வேறு எடை பிரிவில் கலந்து சிவகாசியை சேர்ந்த மாதவன் என்பவர் முதல் பரிசை வென்று சான்றிதழையும் பெற்றார்.  மேலும் சாதனை மாணவனை சிவகாசி மாநகர திமுக 6 ஆம் பகுதி கழக செயலாளர் ஞானசேகரன் அழைத்து வாழ்த்து மற்றும் பாராட்டுகள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் சேவுகன், சிவகாசி மாநகர விளையாட்டு அணி மேம்பாட்டு துணை அமைப்பாளர் மைக்கேல் மற்றும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆறுமுகசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


விருதுநகர்