சிவகாசி: தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு
விருதுநகர் மாவட்டம், சிவகாசி முஸ்லிம் நடுத்தெருவில் வசிக்கும் மைதீன் பிச்சை, தனது மகன் ரஹ்மத்ஆலமுடன் சேர்ந்து நேரு சாலையில் உணவகம் நடத்தி வருகிறார். இவர்களின் உணவு விடுதிக்கு ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த இருவர் மது போதையில் சாப்பிட வந்ததாக தெரிகிறது. அப்போது ஹோட்டலில் உணவருந்தி கொண்டிருந்தவர்களுடன், மது போதையிலிருந்த இருவரும் பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்தவர்கள் சமரசம் செய்து அனைவரையும் அனுப்பி வைத்த நிலையில், மது போதையிலிருந்தவர்கள் தங்களின் செல்போன் மூலமாக மேலும் இருவருக்கு தகவலளித்ததின் பேரில், நாலு நபர்களும் சேர்ந்து கடையிலிருந்த பொருட்களை சேதப்படுத்தியதுடன், ஹோட்டல் உரிமையாளர் மைதீன்பிச்சை, அவரது மகன் ரஹ்மத்ஆலம் ஆகிய இருவரையும் தாக்கி விட்டு தப்பி யோடிவிட்டனர். காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்த சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, உணவு விடுதியில் தகராறு நடத்தியதோடு, அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி தப்பியோடிய நபர்கள் குறித்து அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.