சிவகாசி: 2026ல் அதிமுக ஆட்சிதான். முன்னாள் அதிமுக அமைச்சர்...

57பார்த்தது
2026ல் அதிமுக ஆட்சிதான். அதிமுக முன்னாள் அமைச்சர் கே. டி. இராஜேந்திரபாலாஜி சிவகாசியில் பேச்சு.
விருதுநகர் மாவட்டம்,
2026ல் அதிமுக ஆட்சிதான். அதிமுக முன்னாள் அமைச்சர் கே. டி. இராஜேந்திரபாலாஜி சிவகாசியில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் பேச்சு.
சிவகாசியில் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பாக அதிமுக கட்சியை சேர்ந்த உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கும் விழா மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான
கே. டி. இராஜேந்திரபாலாஜி தலைமையில் நேற்று இரவு நடைப்பெற்றன. பின்னர் பேசிய அவர் அதிமுக கட்சி மீது மக்கள் விருப்பு தெரிவிக்கின்றனர், திமுக மீது வெறுப்பு தெரிவிக்கின்றனர் என்றும், 2026ல் அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்து எடப்பாடியார் முதலமைச்சர் ஆகிறார், ஸ்டாலின் வீட்டுக்கு போகிறார் என்றார். மேலும் நடைப்பெற்ற அதிமுக கட்சியை சேர்ந்த பல்வேறு அணியை சேர்ந்த ஆண், பெண் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி