சிவகாசி - Sivakasi

சிவகாசி: 2026ல் மீண்டும் அதிமுக ஆட்சி.. முன்னாள் அமைச்சர் இராஜேந்திர பாலாஜி

சிவகாசியில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் K. T. இராஜேந்திரபாலாஜி பேசியதாவது: 2026-ம் ஆண்டு அதிமுக ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைக்க அத்தாட்சியாக அனைவரும் முயற்சியாக பணியாற்ற வாய்ப்பு தாருங்கள் என்ற ஆர்வத்துடன் பொறுப்பாளர்களும், நிர்வாகிகளும் வந்துள்ளனர். வரும் காலம் அதிமுகவிற்கு பொற்காலம். எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் முதல்வராகும் நாள் வந்துகொண்டிருக்கிறது. 2026-ல் அதிமுக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க அனைவரும் இணைந்து பணியாற்றி வெற்றிக்காக பாடுபட வேண்டும். ஆளுகின்ற இடத்தில் நாம் வரும்போது அனைவருக்கும் உதவிகரமாக இருப்போம். மக்கள் தொண்டனான எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி வரவேண்டும். அதிமுக என்றென்றும் கட்சி நிர்வாகிகளுக்கு பின்னால் இருக்கும். அதிமுக வெற்றிக்காக நிர்வாகிகள் விரைவாக உழைக்க வேண்டும். உங்களுக்காக நாங்கள் உழைப்போம் என்றார். மேலும் அதிமுக கட்சியைச் சேர்ந்த ஆண், பெண் நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

வீடியோஸ்


விருதுநகர்