சர்த்துார்: பாலத்தை நேரில் ஆய்வு செய்த அதிகாரி...
விருதுநகர் மாவட்டம், சாத்துார் அருகேயுள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் இறவார்பட்டியில் இருந்து அச்சங்குளம் செல்லும் வழியில் வைப்பாற்றின் குறுக்கே தரைப்பாலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் கடந்த சில தினங்களில் தொடர் மழையால் தரைப்பாலம் முழுவதும் அடித்து செல்லப்பட்டது. இதனால் சாலை முற்றிலும் சேதம் அடைந்தன. தற்போது இப்பகுதி வழியே செல்ல முடியாத வகையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இறவார்பட்டி, சல்வார்பட்டி, கோபாலபுரம், சுப்பிரமணியபுரம், தாயில்பட்டி, அச்சங்குளம், கண்டியாபுரம், உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வைப்பாற்றை கடக்கமுடியாமல் கூடுதலாக 10 கிலோமீட்டர் சுற்றி செல்கின்றனர். இதனால் வீண் அலைச்சல் ஏற்படுவதால் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் சேதம் அடைந்து இருக்கும் தரைப்பலத்தை செயற்பொறியாளர் வெண்ணிலா, உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, விரைவில் சீர் செய்யும் பணி தொடங்கும் என்றனர்.