ஐபிஎல் 2025 மெகா ஏலம் சவுதி அரேபியா ஜெட்டா நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாம் செட் ஏலத்தில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு ரூ.2 கோடி அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கேகேஆர், சிஎஸ்கே, எஸ்ஆர்ஹெச் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதையடுத்து, முகமது ஷமியை சன்ரைசஸ் ஐதராபாத் அணி ரூ.10 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.