விருதுநகர் மாவட்டம், சாத்தூரில்; கூட்டுறவுத் துறையின் மூலமாக நடைபெற்ற 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப. , அவர்கள் தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ. ஆர். ஆர். ரகுராமன் அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் அவர்கள்; 2003 பயனாளிகளுக்கு ரூ. 16. 76 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார்கள்.